
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கு பழைய முறைப்படி கலைப் பிரிவு பணியிடங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கு பழைய முறைப்படி கலைப் பிரிவு பணியிடங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தினர் ஆகியோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
திருவள்ளூர் பெரியகுப்பம் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் கே.சி.முரளிதர் தலைமை வகித்தார். அச்சங்கத்தின் திருவள்ளூர் கல்வி மாவட்டச் செயலாளர் ஜி.குமார் வரவேற்புரை வழங்கினார். இதில், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழகத்தின் மாநிலத் துணைத்தலைவர்
ஆர்.கே.சாமி, மாவட்டப் பொருளாளர் ஜம்பு ஆகியோர் சிறப்புரை வழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கு, பழைய முறைப்படி கலைப் பிரிவு பணியிடங்களை வழங்க வேண்டும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான சம்பளம் மற்றும் இதர பட்டியல்களை உரிய நாளில் பெற்றுத்தர மாவட்டக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், காலியாக உள்ள தலைமையாசிரியர், முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒளிவுமறைவின்றி இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில், நிர்வாகிகள் எஸ்.மாணிக்கம், வி.எஸ்.சங்கர், எஸ்.ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொன்னேரி கல்வி மாவட்டத் தலைவர் எஸ்.சரவணன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






