மாநில அளவில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தற்காப்புக் கலை போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வெற்ற டி.ஜே.எஸ். பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
நேஷனல் ஆல் ஸ்டைல் மார்சியல் ஆர்ட்ஸ் அமைப்பின் சார்பில், சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குங்பூ, யோகா உள்ளிட்ட தற்காப்புக் கலை போட்டிகள் நடைபெற்றன.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டிகளில், குங்பூ ஷாய் பிரிவில்
டி.ஜே.எஸ் பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளியின் 3-ஆம் வகுப்பு மாணவர் காமேஷ், 5-ஆம் வகுப்பு மாணவர் சுகன் ஆகியோர் முதல் பரிசைப் பெற்றனர்.
அதேபோல குங்பூ கட்டாவ் பிரிவில் டி.ஜே.எஸ். பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியின் 1-ஆம் வகுப்பு மாணவர் அன்புசெழியன், 3-ஆம் வகுப்பு மாணவர் காமேஷ், 5-ஆம் வகுப்பு மாணவர் சுகன் ஆகியோர் முதல் பரிசைப் பெற்றனர். மேலும் 3-ஆம் வகுப்பு மாணவி விஷாலி யோகாவில் முதல் பரிசை வென்றார்.
மேலும், இப்போட்டிகளில் 7 மாணவர்கள் இரண்டாம் பரிசையும், 7 மாணவர்கள் 3-ஆம் பரிசையும் வென்றனர். அதிக பதக்கங்களை வென்றதன் அடிப்படையில் டி.ஜே.எஸ். பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்துக்கான கோப்பை வழங்கப்பட்டது.
தொடர்ந்து, புதன்கிழமை டி.ஜே.எஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு, டி.ஜே.எஸ். கல்விக் குழுமத்தின் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். டி.ஜே.எஸ். பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளித் தாளாளர் தமிழரசன், நிர்வாக அலுவலர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சுகாதா தாஸ் வரவேற்றார். நிகழ்ச்சிகளில், போட்டிகளில் வென்ற மாணவர்களை டி.ஜே.எஸ். கல்விக் குழுமத்தின் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் பாராட்டி பரிசளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி-சேவா மையங்கள் தொடங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக மக்களின் விருப்பங்களைப் பிரதிபலித்த தேர்தல்: முதல்வர் விஜய்க்கு மமதா வாழ்த்து!

லக்னௌவை வீழ்த்தி சிஎஸ்கே அபாரம்; புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேற்றம்!

தமிழக முதல்வராகப் பதவியேற்றார் விஜய் - புகைப்படங்கள்
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
