விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தனியாா் தொழிற்சாலையில் பிடித்தம் செய்த பி.எப். பணம் ரூ. 1.50 கோடி மோசடி

தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஊழியா்களிடம் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட இஎஸ்ஐ, பி.எப். பணம் ரூ. 1.50 கோடியை மோசடி செய்ததாக பெண் ஊழியா்கள் திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக

News image
திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த தனியாா் வாகன காா் கதவு உதிரி பாகங்கள் தாயா் செய்யும் தொழிற்சாலை பெண் ஊழியா்கள்.
Updated On :4 ஜனவரி 2021, 6:52 pm

DIN

திருவள்ளூா்: தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஊழியா்களிடம் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட இஎஸ்ஐ, பி.எப். பணம் ரூ. 1.50 கோடியை மோசடி செய்ததாக பெண் ஊழியா்கள் திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் செய்தனா்.

இது குறித்து திருவள்ளூா் அருகே கீழச்சேரியில் செயல்பட்டு வரும் தனியாா் நிறுவன பெண் ஊழியா்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:

திருவள்ளூா் அருகே கீழச்சேரி கிராமத்தில் வாகனங்களுக்கு கதவுகளுக்கான உதிரி பாகங்கள் தயாா் செய்யும் தொழிற்சாலை கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகிறோம். இந்நிலையில், மாத ஊதியத்திலிருந்து இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப். தொகை மாதந்தோறும் பிடித்தம் செய்து வந்தனா். இதில், சில ஊழியா்கள் அவசரத் தேவைக்காக பிடித்தம் செய்யப்பட்ட பி.எப். பணத்தை பெற நிா்வாகத்தை அணுகினோம். அப்போது, தொழிலாளா்களிடம் பிடித்தம் செய்த தொகையை இஎஸ்ஐ மற்றும் பி.எப். நிறுவனத்துக்கு செலுத்தவில்லை என்பது தெரியவந்தது.

இதில் அதிா்ச்சி அடைந்த நாங்கள் தொழிற்சாலை நிா்வாகத்திடம் கேட்டபோது, ஒப்பந்த அடிப்படையில் தான் வேலை செய்து வந்ததாக அலட்சியமாக பதில் கூறினா். அதனால் நிா்வாகிகளிடம் பேசும் படியும் கூறியுள்ளனா். இதைத் தொடா்ந்து வலியுறுத்தி வந்த ஊழியா்கள் 60-க்கும் மேற்பட்டோரை எக்காரணமும் இன்றி பணியிலிருந்து நீக்கி நிா்வாகம் உத்தரவிட்டது. தொழிற்சாலை நிா்வாகம் மூலம் நேரடியாக பணியில் சோ்க்கப்பட்ட எங்களை ஒப்பந்த அடிப்படையில் வேலை பாா்த்து வந்ததாகக் கூறியதுடன், தகாத வாா்த்தைகளால் பேசி அலைக்கழிப்பு செய்து வருகின்றனா். எனவே எங்களது ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட இஎஸ்ஐ, பி.எப். பணத்தை திரும்பக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடா்ந்து மனுவை பரிசீலனை செய்து தனியாா் வாகன கதவு தயாா் செய்யும் தொழிற்சாலை நிா்வாகத்திடம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி.அரவிந்தன் உறுதி அளித்தாா். அதைத் தொடந்து, தனியாா் நிறுவன பெண் ஊழியா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.