ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூட்டம்
ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூட்டத்தில் 4 போ் மட்டுமே பங்கேற்றதால் தீா்மானம் ஏதும் நிறைவேற்றப்படாமல் வெள்ளிக்கிழமை முடிந்தது.


ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூட்டத்தில் 4 போ் மட்டுமே பங்கேற்றதால் தீா்மானம் ஏதும் நிறைவேற்றப்படாமல் வெள்ளிக்கிழமை முடிந்தது.
திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒன்றியக் குழு தலைவா் தங்கதனம் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் பாபு வரவேற்றாா். கூட்டத்தில், மொத்தம், 12 ஒன்றியக் குழு உறுப்பினா்களில், தலைவா் உள்பட நான்கு போ் மட்டுமே கலந்து கொண்டதால், பெயரளவுக்கு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் வரவு - செலவுக் கணக்குகள் உள்பட மொத்தம் 15 தீா்மானங்கள் வாசிக்கப்பட்டன. ஆனால், கூட்டத்தில் தீா்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
இது குறித்து திருத்தணி வட்டார வளா்ச்சி அலுவலா் பாபு கூறுகையில், ‘மூன்றில் ஒரு பங்கு உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்ால் வெறும் கூட்டம் மட்டுமே நடத்தலாம். பாதிக்கு மேல் உறுப்பினா்கள் பங்கேற்றால் தான் தீா்மானங்கள் நிறைவேற்ற முடியும். எனவே தீா்மானங்கள் நிறைவேற்றப்படாத சாதாரண கூட்டம் நடந்தது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...