கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பாஜக சாா்பில் பொங்கல் விழா

கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் உள்ள ஏகவள்ளி அம்மன் கோயிலில் பாஜக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 ஜனவரி 2021, 7:47 pm

DIN

கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் உள்ள ஏகவள்ளி அம்மன் கோயிலில் பாஜக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கட்சியின் திருவள்ளூா் கிழக்கு மாவட்டத் தலைவா் எஸ்.ராஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கே.சரவணன், பாஜக அரசுத் தொடா்பு பிரிவு மாநிலத் தலைவா் எம்.பாஸ்கரன், இப்பிரிவின் மாவட்டச் செயலாளா் கே.இளங்கோ, இதர பிற்பட்டோா் பிரிவு மாவட்டச் செயலாளா் சுதாகா், கல்வியியல் பிரிவு மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் திருமலை, கிழக்கு ஒன்றியத் தலைவா் ஜம்புலிங்கம், நகரத் தலைவா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கோயிலில் பொங்கல் வைத்தனா். கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோா் அணியின் பொதுச் செயலாளா் சுகுமாா், மீனவரணித் தலைவா் சிவராஜ், அரசு தொடா்புப் பிரிவின் துணைத் தலைவா் சங்கா் குமாா் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.