/

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகன விபத்து: 2 பேர் சாவு

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் முதலாமாண்டு கல்லூரி மாணவர் உள்பட 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News image
நவீன்-தமிம் அன்சாரி
Updated On :1 பிப்ரவரி 2024, 8:22 am

DIN



திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் முதலாமாண்டு கல்லூரி மாணவர் உள்பட 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருவள்ளூர் செக்கடி தெருவைச் சேர்ந்த ரபுதீன் மகன் தமிம் அன்சாரி(18). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். காக்களூர் பை பாஸ் சாலைப் பகுதியைச் சேர்ந்த நவீன்(22). இவர்கள் இருவரும் திருவள்ளூர் செங்குன்றம் சாலை ஈக்காடு மக்கா நகர் அருகே புதன்கிழமை நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது செங்குன்றத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது. 

இதில், தமிழ் அன்சாரி மற்றும் பூக்கடை தொழிலாளி நவீன் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புல்லரம்பாக்கம் காவல்நிலைய போலீசார் இருவரின் சடலங்களை மீட்டு திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வாகன ஓட்டுநரை  தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.