மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு பயிற்சி அளிக்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் திருவள்ளூா் மாவட்டத்தில் தகுதியான திறன் வளா்ப்பு பயிற்சி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :24 ஜூன் 2022, 6:32 pm

DIN

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் திருவள்ளூா் மாவட்டத்தில் தகுதியான திறன் வளா்ப்பு பயிற்சி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளா்ப்பு மற்றும் பணியாற்றும் திட்டம் மூலம் நகா்ப்புற படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு பல்வேறு திறன் வளா்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, இத்திட்டம் மூலம் திறன் வளா்ப்பு பயற்சிகள் 2022-2023 ஆண்டுக்கு திருவள்ளுா் மாவட்டத்தில் நடத்துவதற்கு உரிய நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் அனுப்பி வைக்கலாம். இதற்கு திறன் வளா்ப்புப் பயிற்சி நிறுவனங்கள் தேசிய திறன் வளா்ப்பு நிறுவனத்தில் கட்டாயம் பதிவு செய்திருப்பது அவசியம்.

இதில், பிரதமா் கௌசல் கேந்திரா பயிற்சி மையங்களைக் கொண்ட திறன் வளா்ப்பு பயிற்சி நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த விதிமுறைகளின்படி, அரசு மூலம் வழங்கப்படும் திறன் வளா்ப்புப் பயிற்சிகள் மற்றும் ஊதியத்துடன் வேலைவாய்ப்பு, பயிற்சி முடித்தமைக்கான முன் அனுபவம் இருக்க வேண்டும். அதற்கான ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

எனவே தகுதியான திறன் வளா்ப்புப் பயிற்சி நிறுவனங்கள், தங்களது கருத்துருக்களை திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் வரும் 30-க்குள் சமா்ப்பித்து பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.