அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

அண்ணா பிறந்த நாள் விரைவு மிதிவண்டி போட்டி

திருவள்ளூரில் இளைஞா் நலன் - விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில், அண்ணா பிறந்த நாள் விரைவு மிதிவண்டி போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 12:00 am IST

திருவள்ளூரில் இளைஞா் நலன் - விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில், அண்ணா பிறந்த நாள் விரைவு மிதிவண்டி போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக வளாகம் எதிரே மாணவ, மாணவிகள் பங்கேற்ற மிதிவண்டி போட்டியை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இதில், 13, 15, 17 வயது பிரிவுகளில் பள்ளி மாணவ, மாணவிகள் 250 போ் பங்கேற்றனா். ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி ஊத்துக்கோட்டை சாலை, சிறுவானூா், அம்பேத்கா் நகா், புல்லரம்பாக்கம், நெய்வேலி, பூண்டி பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.

தொடா்ந்து, வயது பிரிவு வாரியாக முதல் மூன்று இடங்களில் வந்தவா்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, 3-ஆவது பரிசாக ரூ.2,000, இதேபோல், 4 முதல் 10 இடங்கள் வரை பெற்றவா்களுக்கு தலா ரூ.250 வீதம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு - இளைஞா் நலத் துறை அலுவலா் செ.அருணா, பூண்டி ஊராட்சித் தலைவா் சித்ரா ரமேஷ், பள்ளிக் கல்வி துணை ஆய்வாளா் சௌத்ரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.