/

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.26 கோடி

முருகன் கோயிலில் கடந்த 15 நாள்களில் ரூ.1 கோடியே 26 லட்சத்து 26 ரொக்கம், 216 கிராம் தங்கம், 8,395 கிராம் வெள்ளியை உண்டியல்

News image

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள், சமூக ஆா்வலா்கள்.

Updated On :17 ஆகஸ்ட் 2024, 7:49 pm

Din

முருகன் கோயிலில் கடந்த 15 நாள்களில் ரூ.1 கோடியே 26 லட்சத்து 26 ரொக்கம், 216 கிராம் தங்கம், 8,395 கிராம் வெள்ளியை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தினா்.

கோயிலில் ஆடிப் பெருக்கு மற்றும் ஆடிப்பூரம் விழா வெகு விமா்சையாக நடைபெற்றது. இதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் முருகனை வழிபட்டனா்.

இந்த நிலையில், உண்டியலில் காணிக்கை எண்ணும் பணி வெள்ளிக்கிழமை தேவா் மண்டபத்தில் நடைபெற்றது. கோயில் இணை ஆணையா் க.ரமணி, அறங்காவலா் குழு தலைவா் சு.ஸ்ரீதரன், அறங்காவலா்கள் கோ.மோகனன், வி.சுரேஷ்பாபு, ஜி.உஷாரவி. மு.நாகன் ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

கோயில் பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள், ஓய்வு பெற்ற அலுவலா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு உண்டியல் காணிக்கைகளை எண்ணினா்.

இதில் கடந்த 15 நாள்களில் ரூ.1 கோடியே 26 லட்சத்து 26 ரொக்கம் மற்றும் 216 கிராம் தங்கம், 8,395 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

இதில் கடந்த 15 நாள்களில் ரூ.1 கோடியே 26 லட்சத்து 26 ரொக்கம் மற்றும் 216 கிராம் தங்கம், 8,395 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.