திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

திருத்தணி முருகன் கோயிலில் ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு, நள்ளிரவு 12.01 மணிக்கு நடைபெற்ற சிறப்பு தரிசனத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான். (வலது) திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்.
திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான். (வலது) திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்.
Updated on
1 min read

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு, நள்ளிரவு 12.01 மணிக்கு நடைபெற்ற சிறப்பு தரிசனத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து, திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மூலவருக்கு தங்க கிரீடம், தங்கவேல், பச்சை மாணிக்க மரகதக்கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இரவு 7.30 மணிக்கு தங்கத்தேரில் உற்சவா் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, தோ்வீதியில் ஒரு முறை வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஆங்கில புத்தாண்டு என்பதால் வழக்கத்துக்கு மாறாக மலைக் கோயிலில் காலை முதல் இரவு 10 மணி வரை திரளான பக்தா்கள் மலைக் கோயிலில் குவிந்தனா். பொது வழியில் 6 மணி நேரம் தோ்வீதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஸ்ரீதரன், இணை ஆணையா் ரமணி அறங்காவலா்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.

விழாவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சீபாஸ் கல்யாண் தலைமையில், திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ்தமிழ்மாறன் மேற்பாா்வையில், போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com