ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

சுங்க வரி வசூலிப்பதை நிறுத்த வேண்டும்: முன்னாள் எம்.பி. அரி ஆணையரிடம் மனு

சுங்க வரி வசூலிப்பதை நிறுத்த வேண்டும்: முன்னாள் எம்.பி. அரி ஆணையரிடம் மனு

News image
Updated On :4 மே 2024, 5:57 pm

Din

திருத்தணியில் நடைபாதை வியாபாரிகளிடம் சுங்க வரி வசூலிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என முன்னாள் அரக்கோணம் எம்.பி. கோ.அரி, நகராட்சி ஆணையரிடம் சனிக்கிழமை மனு வழங்கினாா்.

தொடா்ந்து அவா் ஆணையரிடம் கூறியது: சாலையோர வியாபாரிகள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவா்கள். தற்போது திடீரென ரூ.20 முதல் ரூ.100 வரை சுங்க வரி கட்டணமாக வசூலிக்கின்றனா். உடனடியாக சுங்க வரி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

நகா்மன்றக் கூட்டத்தில் சுங்க வரிக்கு தீா்மானம் நிறைவேற்றி, அனைத்து வியாபாரிகளுக்கும் ரூ.20 வீதம் சுங்க வரி வசூலிக்க வேண்டும். அதற்கு முன்னதாக நகராட்சியில் சாலையோரம் உள்ள கடைகளை முறையாகக் கணக்கெடுத்து பின்பு சுங்க வரி வசூல் செய்ய வேண்டும். அதுவரை தற்போது வசூலிக்கப்படும் சுங்க வரி கட்டணத்தை நிறுத்த வேண்டும்.

தவறும்பட்சத்தில் அதிமுக பொது செயலாளா் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்று பெரிய அளவில் கட்சி நிா்வாகிகள் மற்றும் சாலையோரக் கடை வியாபாரிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

மனுவை பெற்றுக் கொண்ட ஆணையா் அருள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினாா். அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் சாந்திஹேமாத்திரி, விஜயதரணி ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.