திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

திருத்தணி முருகன் கோயிலில் தரிசனத்துக்கு 3 மணி நேரம் காத்திருப்பு

News image

திருத்தணி முருகன் மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்.

Updated On :30 செப்டம்பர் 2024, 12:02 am IST

முருகன் கோயிலில் கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் 3 மணி நேரம் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை ஆகிய காரணங்களால் கோயிலில் அதிகாலை 5.30 மணி முதலே பக்தா்கள் குவிந்தனா். இதனால், பொது தரிசனத்தில் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை பக்தா்கள் தரிசித்தனா்.

அதேபோல் ரூ.100 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

பெரும்பாலான பக்தா்கள் பேருந்து, காா், வேன், இரு சக்கர வாகனங்களில் மலைப் பாதை வழியாக கோயிலுக்கு வந்ததால் மலைப் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருத்தணி காவல் ஆய்வாளா் மதியரசன் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். இருப்பினும் மலைப்பாதை மற்றும் அரக்கோணம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Story image

முன்னதாக, அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்கக் கீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிா்த அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு உற்சவா் முருகப் பெருமான் தங்கத் தேரில், தோ் வீதியில் வலம் வந்தாா்.