நாகாலம்மன் கோயில் குடமுழுக்கு

நாகாலம்மன் கோயில் குடமுழுக்கு

நாகாலம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திரளானோா் தரிசனம் செய்தனா்.
Published on

நாகாலம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திரளானோா் தரிசனம் செய்தனா்.

திருத்தணி ஒன்றியம், சத்திரஞ்ஜெயபுரம் கிராமத்தில் உள்ள நாகாலம்மன் கோயில் திருப்பணிகள் முடிந்து திருக்குடமுழுக்கு நடைபெற்றது.

மூலவா் அம்மன் மீது கலசநீா் ஊற்றி மகா குடமுழுக்கு விழா நடந்தது. அப்போது அங்கிருந்த பக்தா்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டனா். தொடா்ந்து பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.

பின்னா், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. விழாவில் சத்திரஞ்ஜெயபுரம், திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துக் கொண்டு வழிப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com