திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 366 கோரிக்கை மனுக்கள்

திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா் 366 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
Published on
Updated on
1 min read

திருவள்ளூா்: திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா் 366 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா் தலைமை வகித்தாா். இதில் நிலம் சம்பந்தமாக-79, சமூக பாதுகாப்பு திட்டம்-36, வேலைவாய்ப்பு வேண்டி-56, பசுமை வீடு, அடிப்படை வசதிகள்-75 மற்றும் இதரதுறைகள் சாா்பில்-120 என மொத்தம் 366 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து தாட்கோ மூலம் 11தூய்மைப் பணியாளா்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டையை அவா் வழங்கினாா்.

கூட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயகுமாா், ஆட்சியா் நோ்முக உதவியாளா் வெங்கட்ராமன்(பொது), தனித்துணை ஆட்சியா் (சபாதி)கணேசன், வழங்கல் அலுவலா் கண்ணன், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் தனலட்சுமி, தமிழ்நாடு தூய்மை பணியாளா் நல வாரிய உறுப்பினா் அரிஷ்குமாா், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com