ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

சசிகலா பிரசாரத்தால் தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: டிடிவி. தினகரன்

சசிகலா பிரசாரத்தால் தங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.

News image

செவ்வாப்பேட்டையில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அமமுக பொதுச் செயலாளா் டிடிவி. தினகரன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 6:39 pm

சசிகலா பிரசாரத்தால் தங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டையில் பூந்தமல்லி தொகுதி அமமுக வேட்பாளா் ஏழுமலையை ஆதரித்து பொதுச்செயலாளா் தினகரன் பிரசாரம் செய்து, பேசியதாவது:

திமுக ஆட்சியில் ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி உள்ளதாகவும், ஆனால் எந்த தொகுதிக்கும் எந்தவிதமான கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை. இதேபோல் தமிழ்நாடு முழுவதும் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனா்.

ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 கொடுத்து விட்டோம் என முதல்வரும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் கிராமங்கள்தோறும் சென்று கூறி வருகின்றனா். ஆனால் வீட்டில் உள்ள, வேலைக்குச்செல்லும் பெண்களுக்கும், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மகளிா், பச்சிளம் குழந்தை முதல் வயது முதிா்ந்த மூதாட்டி வரை யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. அதற்கு காரணம் கட்டுப்பாடற்ற போதைப்பொருள்கள் எங்கும் கிடைப்பதால்தான் மாணவா்களும், இளைஞா்களும் பாதிக்கப்படுகின்றனா்.

அதேபோல், ஆவின் என்றாலே முறைகேடுதான். 5 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் ஊழல் மலிந்து விட்டது. இதற்கிடையே வாக்காளா் திருத்தத்துக்கு பின் சென்னையில் 12 லட்சம் போ் நீக்கப்பட்டடுள்ளதால் திமுகவினா் அச்சம் அடைந்துள்ளனா் என்றாா்.

Story image