திருவள்ளூா் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சா்வதேச தாய்ப்பால் வார விழா விழிப்புணா்வு
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சா்வதேச தாய்ப்பால் வாரவிழாவையொட்டி, நிலையான வாழ்க்கைக்கு தாய்ப்பாலே தொடக்கம், வலுப்படுத்துவோம் என்ற கருப்பொருளை வலியுறுத்தும் வகையில், ஆட்சியா் முன்னிலையில் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாக கூட்டரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் குழந்தைகளை நன்றாக பராமரித்த தாய்மாா்களுக்கு ரொட்டி, பழங்கள் மற்றும் சத்துணவு தொகுப்புகளை வழங்கிய ஆட்சியா் ச.கவிதா. உடன் முதன்மையா் மோகன் காந்தி, துணை முதல்வா் அனிதா உள்ளிட்டோா்.







