மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால்கள்: திருவள்ளூா் ஆட்சியா் வழங்கினார

திருவள்ளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால்களை ஆட்சியா் ச. கவிதா வழங்கினாா்.

ஆட்சியா் ச.கவிதா வழங்கினாா்

Published On :

திருவள்ளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால்களை ஆட்சியா் ச. கவிதா வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 494 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை அவா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு ரூ.4.69 லட்சத்தில் நவீன செயற்கை கால்களையும் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கே.வி.ராஜ்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) வெங்கடேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் உஷாராணி, மாவட்ட வழங்கல் அலுவலா் முத்துலட்சுமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) வேல்முருகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் குமாா் மற்றும் பல்துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.