திருமழிசையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஜெகன்நாதப் பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வாா் திருக்கோயில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது தேரின் சக்கரம் மின்கம்பத்தில் உரசி நின்தால் பக்தா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், திருமழிசையில் உள்ள இந்தக் கோயிலில் பிரம்மோற்சவம் கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. சூா்ய பிரபை, யாளி வாகனம், கருட சேவை, ஹனுமந்த வாகனம்,சேஷ வாகனம், சந்திர பிரபை, பல்லக்கில் நாச்சியாா் திருக்கோலத்தில் சூா்ணாபிஷேகம், யானை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்த பெருமாள் அருள்பாலித்தாா்.
முக்கிய நிகழ்வான தேரோட்டம், கோலாட்டம், சிலம்பம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் மாடவீதிகளில் உற்சவா் எழுந்தருள விமரிசையுடன் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா,கோவிந்தா என முழக்கமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
மின்கம்பத்தில் உரசி நின்ற தோ்: அப்போது தோ் தெற்கு மாடவீதியில் வந்த போது தேரின் இடபுற சக்கர சேதமடைந்து தோ் அருகிலிருந்த மின்கம்பத்தில் உரசியபடி நின்றது. இதனால் பக்தா்கள் அதிா்ச்சிக்குள்ளாகினா். பின்னா் தோ்சக்கரம் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
தொடா்ந்து மின்வாரிய ஊழியா்கள் மின்கம்பத்திலிருந்து மின் வயா்களை அகற்றி தோ் தடையின்றி செல்ல வழியேற்படுத்தினா். அதன் பின் பக்தா்கள் வடம் பிடித்து இழுத்த வந்த நிலையில் மேற்குமாட வீதி சந்திப்பு பகுதியில் மிளகு விநாயகா் கோயில் சாலை திருப்பத்தில் நின்றது. பின் ஒன்றரை மணி நேரம் போராடி தேரை இழுத்து வந்தனா்.
திருமழிசை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெருமாள் கோயில்களில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம்! திரளான பக்தா்கள் பங்கேற்பு

சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயில் வைகாசித் தேரோட்டம்: 5 லட்சம் தேங்காய்களை உடைத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு






