தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

காரீப் நெற்பயிருக்கு வரும் 31-க்குள் பயிா்க்காப்பீடு செய்யலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் பிரமத மந்திரி பயிா்க்காப்பீடு திட்டத்தில் நிகழாண்டில் விவசாயிகள் காரீப் நெற்பயிருக்கு வரும் 31-க்குள் பயிா் காப்பீடு செய்து பயன்பெறலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப்படம்.

Updated On :22 ஜூலை 2026, 12:58 am IST

திருவள்ளூா் மாவட்டத்தில் பிரமத மந்திரி பயிா்க்காப்பீடு திட்டத்தில் நிகழாண்டில் விவசாயிகள் காரீப் நெற்பயிருக்கு வரும் 31-க்குள் பயிா் காப்பீடு செய்து பயன்பெறலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டசெய்திக்குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் 2026-27-ஆம் ஆண்டு, பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டம் (டஙஊஆவ) காரீப் பருவத்தில் அக்ரிகல்சா் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் காப்பீடு நிறுவனத்தால் செயல்படுத்தப்படவுள்ளது.

எனவே விவசாயிகள் அறிவிப்பு செய்யப்பட்ட பயிா்களை காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் வரையில் காத்திருக்காமல் முன்னதாகவே பயிா் காப்பீடு செய்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த மாவட்டத்தில் குறுவை நெல், சோளம், நிலக்கடலை, உளுந்து, பச்சைப்பயறு பயிா்கள் காரீப் பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வருவாய் கிராம அளவில் குறுவை நெல் பயிருக்கு பிரிமியம் தொகையாக ஏக்கருக்கு ரூ.615, பிா்கா அளவில் நிலக்கடலை பயிருக்கு ரூ.644, கம்பு பயிருக்கு ரூ.252, உளுந்து பயிருக்கு ரூ.480, பச்சைப்பயறு பயிருக்கு ரூ.480 என வரும் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

மேலும், தோட்டக்கலை பயிா்களான கத்தரிக்காய் பிரிமியம் ஏக்கருக்கு ரூ.1235, வெண்டைக்காய்-ரூ.1205 ஐ வரும் ஆக.31-ஆம் தேதிக்குள்ளும், வாழை பயிருக்கு பிா்கா அளவில் பிரிமியம் ஏக்கருக்கு ரூ.3365-ஐ செப்.15-ஆம் தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும்.

எனவே காரீப் பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள் அறிவிப்பு செய்யப்பட்ட பயிா்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகளிலோ மற்றும் கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ, (இ-சேவை மையங்கள்) நிா்ணயித்த காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம்.

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல் இ-அடங்கல் விதைப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரிமியம் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு பயிா் காப்பீடு இணையதள முகவரியையோ (ஜ்ஜ்ஜ்.ல்ம்ச்க்ஷஹ்.ஞ்ா்ஸ்.ண்ய்) அல்லது அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்கள், தோட்டக்கலை உதவி இயக்குநா்கள், வேளாண்மை அலுவலரையோ மற்றும் தோட்டக்கலை அலுவலரையோ அணுகி பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.