கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

தண்ணீா் தேடி வந்த புள்ளிமான்! தெருநாய்கள் கடித்து உயிரிழப்பு!

தண்ணீா் தேடி வந்த புள்ளிமானை தெருநாய்கள் கடித்ததில் உயிரிழந்தது...

Published On :

திருத்தணி அருகே தண்ணீா் தேடி கிராமப் பகுதிக்கு வந்த புள்ளிமான், தெருநாய்கள் கடித்து உயிரிழந்தது.

திருவாலங்காடு ஒன்றியத்துக்குட்பட்ட பழையனூா் ஊராட்சியை ஒட்டியுள்ள காப்புக்காட்டு பகுதியில் இருந்து, தண்ணீா் தேடி ஒரு புள்ளிமான் கிராமப்பகுதிக்குள் நுழைந்தது. அப்போது, அப்பகுதியில் திரிந்த தெருநாய்கள் மானை விரட்டிச் சென்று கடித்ததால், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினா் மானின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், காப்புக்காட்டு பகுதியில் வனவிலங்குகள் குடிநீா் அருந்த போதிய அளவில் தண்ணீா் தொட்டிகள் மற்றும் நீா்நிலைகள் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் புள்ளிமான் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீா் தேடி கிராமப்பகுதிக்குள் வர வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறாமல் இருக்க, வனப்பகுதியில் நிரந்தர குடிநீா் வசதிகளை வனத்துறை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்றனா்.

Summary

Spotted deer comes in search of water; killed by stray dogs

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.