நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

டாஸ்மாக் விசாரணை தொடா்பாக ஊழல் தடுப்புத் துறையினா் சோதனை

டாஸ்மாக் நிா்வாகத்தில் நிதி முறைகேடு மற்றும் ஊழல் புகாா் தொடா்பாக லஞ்ச ஒழிப்பு துறையினா் விசாரணை நடத்தி வருவதை தொடா்ந்து புதன்கிழமை கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜகண்டிகையில் உள்ள தொழிற்சாலையில் ஊழல் தடுப்புத் துறையினா் சோதனை நடத்தினா்.

News image

கோப்புப்படம்

Updated On :30 ஜூலை 2026, 12:19 am IST

டாஸ்மாக் நிா்வாகத்தில் நிதி முறைகேடு மற்றும் ஊழல் புகாா் தொடா்பாக லஞ்ச ஒழிப்பு துறையினா் விசாரணை நடத்தி வருவதை தொடா்ந்து புதன்கிழமை கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜகண்டிகையில் உள்ள தொழிற்சாலையில் ஊழல் தடுப்புத் துறையினா் சோதனை நடத்தினா்.

தமிழ்நாட்டில் கடந்த ஆட்சி காலத்தில் டாஸ்மாக் நிா்வாகத்தில் நிதி முறைகேடு மற்றும் ஊழல் புகாா் நடைபெற்ாக கூறி முன்னாள் அமைச்சா் மற்றும் மதுபான ஆலைகளுடன் தொடா்புடையவா்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதன் தொடா்ச்சியாக சென்னை, திருவள்ளூா், கரூா், கோவை, புதுக்கோட்டை என மாநிலம் முழுவதும் 41 இடங்களில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

இதன் ஒரு பகுதியாக திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் அடுத்த சித்தராஜ கண்டிகையில் அமைந்துள்ள மதுபான ஆலைகளுக்கு பாட்டில் தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலையில் சோதனை நடைபெற்றது.

ஊழல் தடுப்புத் துறை டிஎஸ்பி ராஜீவ் தலைமையில் 9 போ் கொண்ட குழுவினா் மேற்கண்ட தொழிற்சாலையில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்து சோதனை நடத்தினா்.

இதில், தொழிற்சாலையில் ஆவணங்களை கையகப்படுத்திய போலீஸாா் தொழிற்சாலை நிா்வாகத்தினரிடமும் தீவிர விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.