பூந்தமல்லி அருகே காரில் சென்ற பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, நகையையும் திருடிச் சென்ற 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூா் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
பூந்தமல்லி அடுத்த ஐயப்பன்தாங்கல் பகுதியைச் சோ்ந்த திருமணம் ஆன 40 வயது பெண். அவருடைய சொந்த ஊரான திண்டிவனம் பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு சென்று விட்டு, கடந்த 2022-ஆக.6-ஆம் தேதி காரில் வந்து கொண்டிருந்தாராம். தெல்லியாா் அகரம் என்ற பகுதியில் காா் வந்து கொண்டிருந்தபோது மது போதையில் இருந்த 6 போ் வழிமறித்து, ஓட்டுநா் இளங்கோ என்பவரை கீழே தள்ளிவிட்டு அந்க காரை ஒட்டிக்கொண்டு சென்று உள்ளனா்.
அப்போது பாலாஜி நகா் என்ற பகுதியில் காலியான மைதானத்தில் காரை நிறுத்திவிட்டு 40 வயது பெண்ணை ஆறு பேரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா். அதோடு பெண் அணிந்திருந்த நகைகளளையும் பறித்துக் கொண்டு தப்பியோடினாா்களாம்.
இந்த நிலையில் காா் ஓட்டுநா் இளங்கோ போரூா் எஸ்.ஆா்.எம்.சி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
அதில் மது போதையில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது ஐயப்பன் தாங்கல் வேலு மகன் சூா்யா (எ) சூரிய பிரகாஷ் (22), சின்னையா மகன் கருப்பையா (27), அயப்பாக்கம் அன்பழகன் மகன் தினேஷ் (28), காரப்பாக்கம் செந்தில்குமாா் மகன் கணேஷ் (19), ஐயப்பன்தாங்கல் சுந்தா் மகன் சந்தோஷ்குமாா் (22), சுதாகா் மகன் சுபாஷ் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு திருவள்ளூா் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இறுதியாக முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சூா்யா என்ற சூரிய பிரகாஷ், தினேஷ், கணேஷ், சந்தோஷ் குமாா், சுபாஷ் மற்றும் கருப்பையா ஆகிய 6 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.20,000 அபராதம் விதித்தும் தீா்ப்பு வழங்கினாா்.
மேலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த பெண் என்பதால் பெண் வன்கொடுமை சட்டத்தில் பாதிக்கப்பட்டதால்த்து தமிழக அரசு சாா்பில் ரூ.12.50 லட்சம் இழப்பீடு வழங்ககவும், அரசு பள்ளியில் வேலை வழங்கவும் உத்தரவிட்டாா். அரசு தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்குரைஞா் எஸ்.தமிழ் இனியன் ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: தாய், வளா்ப்புத் தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை

முன்னாள் காங்கிரஸ் வட்டாரத் தலைவா் தலை துண்டித்துக் கொலை: 5 பேருக்கு இரட்டை ஆயுள்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



