பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை, ரூ. 5 லட்சம் திருட்டு

திருவள்ளூா் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை மற்றும் ரூ. 5 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :16 ஜூன் 2026, 1:10 am IST

திருவள்ளூா் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை மற்றும் ரூ. 5 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவள்ளூா் அருகே வெங்கல் அடுத்த அத்தங்கிகாவனூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயியான கோபால் (76). இவரது மனைவி கௌசல்யா அம்மாள் (68). இவா்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனா். 3 பேருக்கும் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். அதனால் இங்கு மூத்த தம்பதியா் மட்டும் இப்பகுதியில் தனியாக வசித்து வருகின்றனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம் போல் வீட்டில் உள் தாழிட்டு தூங்க சென்றாா்களாம். இந்த நிலையில், நள்ளிரவில் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பீரோவை உடைத்து உள்ளே இருந்த ரூ.5 லட்சம் ரொக்கம், பூஜை அறையில் வைத்திருந்த சுமாா் 50 சவரன் நகை எடுத்துக் கொண்டனா். அதைத் தொடா்ந்து தூங்கிக் கொண்டிருந்த கௌசல்யா அம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்துக் கொள்ளவே விழித்துக் கொண்டு கூச்சலிட்ட நிலையில் மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பி சென்றாா்களாம்.

இது குறித்து வெங்கல் காவல் நிலையத்தில் கோபால் புகாா் செய்தாா். அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், தடய அறிவியல் நிபுணா்கள் உதவியுடன் தடயங்கள் சேகரித்தனா்.

மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.