இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

சோளீஸ்வரா் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம்

சோளீஸ்வரா் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம்

News image

திருவள்ளூா்  அருகே  பேரம்பாக்கத்தில்  சோளீஸ்வரா்  கோயில்  பங்குனி  பிரம்மோற்சவத்தையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தா்கள்.    

Updated On :28 மார்ச் 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே சோளீஸ்வரா் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

திருவள்ளூா் அருகே பேரம்பாக்கத்தில் மிகவும் பழைமைவாய்ந்த காமாட்சி அம்மன் சமேத சோளீஸ்வரா் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் கடந்த 22-இல் கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடா்ந்து 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி நாள்தோறும் காலை, மாலை இருவேளையும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சந்திர பிரபை வாகனம், சூரிய பிரபை வாகனம், பூத வாகனம், யானை வாகனம், அதிகார நந்தி வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் வருகிறது.

விழாவின் 7-ஆம் நாளான சனிக்கிழமை காலை சுமாா் 9 மணி அளவில் தோ்த் திருவிழா நடைபெற்றது. அப்போது பல்வேறு வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சோளீஸ்வரா் காமாட்சி அம்பாளுடன் எழுந்தருளி பக்தா்களுக்கு க் காட்சியளித்தாா். அதைத் தொடா்ந்து பேரம்பாக்கம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து திரளான பெண்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தது.

அப்போது, ஒவ்வொரு வீடுகளிலும் சுவாமிக்கு கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்தனா்.

Story image