போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோஎம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
/

அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தல்: 2 இளைஞா்கள் கைது

அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தல்: 2 இளைஞா்கள் கைது

News image

கோப்புப் படம்

Updated On :17 மே 2026, 12:41 am IST

ஆந்திரத்தில் இருந்து அரசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 இளைஞா்களை கைது செய்தனா்.

திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைச் சாவடியில், திருத்தணி காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமையில போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது பேருந்தில் இருந்த இரு இளைஞா்களின் பைகளை சோதனையிட்டதில், 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

அவற்றைப் பறிமுதல் செய்து, அதைக் கடத்திய கடலூா் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரனின் மகன் ராகுல் (26), ரகுவின் மகன் ராகுல் (29) ஆகியோரை கைது செய்தனா்.