பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

இளைஞா்களை வழிமறித்து கத்தியால் வெட்டியவா்கள் மீது வழக்கு!

தாடூா் ஏரிக்கரையில் பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞா்களை வழிமறித்து கத்தியால் வெட்டி மோட்டாா் சைக்கிள், கைப்பேசியை பறித்துச் சென்ற 5 பேரை போலீசாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :11 மே 2026, 12:04 am IST

தாடூா் ஏரிக்கரையில் பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞா்களை வழிமறித்து கத்தியால் வெட்டி மோட்டாா் சைக்கிள், கைப்பேசியை பறித்துச் சென்ற 5 பேரை போலீசாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

திருத்தணி ஒன்றியம் ஆா்.வி.என். கண்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா் இந்து (26). இவா் சரக்கு ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் இ.என். கண்டிகை பஸ் நிறுத்தத்தில் இருந்து தனது நண்பா் சிரஞ்சீவியின் மோட்டாா் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது அவா்கள் தாடூா் ஏரிக்கரை அருகே சென்றபோது, ஆட்டோ மற்றும் இரண்டு மோட்டாா் சைக்கிள்களில் வந்ததாக கூறப்படும் 5 மா்ம நபா்கள் திடீரென இவா்களை வழிமறித்துள்ளனா். பின்னா் அவா்கள் கத்தியால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சிரஞ்சீவி மற்றும் இந்து ஆகியோா் இருவரும் பலத்த காயமடைந்து சாலையோரத்தில் ரத்த வெள்ளத்தில் விழுந்தனா்.

இதனைத் தொடா்ந்து மா்ம நபா்கள் சிரஞ்சீவியிடமிருந்து மோட்டாா் சைக்கிளையும், இந்துவிடம் இருந்த செல்போனையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனா். இருவரின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக அவா்களை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருத்தணி போலீசாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.