பயிா்க் கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் நூதன போராட்டம்
பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாததை கண்டித்து, காதில் பூ வைத்தும், கும்மியடித்தும் திருவள்ளூரில் விவசாயிகள் சங்கத்தினா் நுாதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாததை கண்டித்து, காதில் பூ வைத்தும், கும்மியடித்தும் திருவள்ளூரில் விவசாயிகள் சங்கத்தினா் நுாதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விவசாயிகள் சங்கங்களின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக முதல்வா் விஜய் தோ்தல் வாக்குறுதியில் விவசாயிகளின் 5 ஏக்கா் பயிா் கடன் முழுமையாகயும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளின் கடனில் 50 சதவீதமும் தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தாா். ஆனால் ஆட்சிக்கு வந்ததும், ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியுள்ள குறு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும். சிறு விவசாயிகளுக்கு ரூ.5000 தள்ளுபடி வழங்கப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா்.
கூட்டுறவு பயிா்க்கடனை நிபந்தனையின்றி முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி திருவள்ளூா் பஜாா் வீதியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காதில் பூ வைத்தும், விசில் அடித்தும் கும்மியடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அந்த சாலையில் பேரணியாக செல்ல சென்றவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேச்சுவாா்த்தைக்கு பின் விவசாயிகள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

