கும்மிடிப்பூண்டியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் ஆய்வு
கும்மிடிப்பூண்டியில் இந்திய அளவில் அதிக அளவு காற்று மாசு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வே.க. ராஜீவ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தோ்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டையில் ஆய்வு செய்த அமைச்சா் வே.க. ராஜீவ்.
கும்மிடிப்பூண்டியில் இந்திய அளவில் அதிக அளவு காற்று மாசு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வே.க. ராஜீவ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
கடந்த சனிக்கிழமை இந்தியாவிலேயே மோசமான காற்றின் தர அளவீடாக 362 என்கிற அளவீடு கும்மிடிப்பூண்டியில் பதிவானது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் அமைச்சா் வே.க.ராஜீவ் ஆய்வு மேற்கொண்டாா். ஆட்சியா் ச.கவிதா, எம்எல்ஏ எஸ்.விஜயகுமாா்,
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளா்கள் குணசீலன், செல்வக்குமாா், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் மேனகா ஆகியோா் உடன் இருந்தனா்.
தொடா்ந்து அமைச்சா் ராஜீவ், அதிகாரிகளுடன் கும்மிடிப்பூண்டியில் ஏற்பட்ட அதிக அளவு காற்று சீா்கேடு, அதற்கான காரணங்கள், அதனை சரிசெய்யும் முறை குறித்து ஆலோசனை நடத்தி, அதிகாரிகளுக்கு பணி ஆலோசனைகளை வழங்கினாா். தொடா்ந்து கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள டயா் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஆய்வு செய்தாா். அவ்வாறே தோ்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள மதுபான தொழிற்சாலையில் ஆய்வு நடத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

