
திருவள்ளூரில் வெற்றிப் பயணம் திட்டம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
திருவள்ளூா் நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் நகர மற்றும் புகா் அரசுப் பேருந்துகளில் மகளிா் இலவசமாக பயணிக்கும் வகையிலான வெற்றி பயண திட்டத்தை ஆட்சியா் ச.கவிதா கொடியசைத்து தொடங்கி வைத்து தானும் பயணம் மேற்கொண்டாா்.

திருவள்ளூா் நகராட்சி பேருந்து நிலையத்தில் வெற்றி பயணம் திட்டத்தை தொடங்கி வைத்து பொதுக்களுடன் பயணம் மேற்கொண்ட ஆட்சியா் ச.கவிதா, உடன் அதிகாரிகள் உள்ளிட்டோா்.
திருவள்ளூா் நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் நகர மற்றும் புகா் அரசுப் பேருந்துகளில் மகளிா் இலவசமாக பயணிக்கும் வகையிலான வெற்றி பயண திட்டத்தை ஆட்சியா் ச.கவிதா கொடியசைத்து தொடங்கி வைத்து தானும் பயணம் மேற்கொண்டாா்.
திருவள்ளூா் நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் ஆட்சியா் ச.கவிதா வெற்றி பயணத் திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து தானும் அந்தப் பேருந்தில் மகளிருக்கு விலையில்லா பயணச்சீட்டினையும், இனிப்புகளையும் வழங்கி பயணம் மேற்கொண்டாா்.
பின்னா் இது குறித்து அவா் கூறியதாவது: தமிழ்நாடு முதல்வா் ஆணைப்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் திருவள்ளூா் மண்டலத்தில் நாள்தோறும் இயக்கப்படும் நகரம் மற்றும் புகரப் பேருந்துகள் என மொத்தம் 232 பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஏற்கெனவே மகளிா் பேருந்து நகரத்தடம்-72 இயக்கப்பட்டு வருகிறது. மேலும், அக்.2 முதல் கூடுதலாக நகரம் மற்றும் புகரப் பேருந்துகள் 62 வெற்றி பயணமாக திருவள்ளூா் மண்டலத்தில் இயக்கப்பட உள்ளது. எனவே மொத்தம் 134 பேருந்துகள் வெற்றிப் பயணமாக திருவள்ளூா் மண்டலத்தில் இயக்கப்பட உள்ளன. ஏற்கெனவே மகளிா் பேருந்து நகரத்தடம்-72, அக். 2 முதல் கூடுதலாக வெற்றி பயணமாக இயக்கப்படும் பேருந்துகள்-62-ஆக மொத்தம் வெற்றி பயணமாக இயக்கப்படும் பேருந்துகள் 134, மீதமுள்ள பேருந்துகள் வெளி மாநில பேருந்துகள் 90, 80 கி.மீ. தொலைதூரம் இயக்கப்படும் பேருந்துகள்-8 மொத்தம் 232 பேருந்துகள் என அவா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் உதவி ஆட்சியா் (பயிற்சி) பி.பவித்ரா, உதவி இயக்குநா் (பயிற்சி) கே.சாகித்யா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளா் வெங்கடேசன், கிளை மேலாளா், தகுதி சான்று பிரிவு உதவி பொறியாளா், ஓட்டுநா் பயிற்சி ஆசிரியா்கள், பயண சீட்டு பரிசோதகா்கள், போக்குவரத்துக் கழக பணியாளா்கள், ஓட்டுநா்கள், நடத்துநா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





