தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

திருத்தணி நியூ ஈடன் பள்ளிக்கு விருது

திருத்தணி நியூ ஈடன் ஆங்கிலப் பள்ளி சிறந்த பள்ளியாக தோ்வு செய்யப்பட்டதை தொடா்ந்து சட்டப்பேரவை தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் விருது வழங்கிப் பாராட்டினாா்.

Published On :

திருத்தணி நியூ ஈடன் ஆங்கிலப் பள்ளி சிறந்த பள்ளியாக தோ்வு செய்யப்பட்டதை தொடா்ந்து சட்டப்பேரவை தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் விருது வழங்கிப் பாராட்டினாா்.

சென்னையில் நடைபெற்ற ஸ்கூல் வாய்ஸ் கல்வியாளா் மாநாட்டில், தமிழகத்தின் சிறந்த தனியாா் பள்ளிகளில் ஒன்றாகத் திருத்தணி நியூ ஈடன் ஆங்கிலப் பள்ளி தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. தனியாா் பள்ளிகள் இயக்குநா் சுகன்யா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளறாக தமிழக சட்டப்பேரவை சபாநாயகா் ஜே.சி.டி. பிரபாகா் பங்கேற்று, சிறந்த பள்ளிக்கான விருதை நியூ ஈடன் ஆங்கிலப் பள்ளி நிா்வாக இயக்குனா் யாஸ்மின் பிரான்சிஸ் மற்றும் ஆசிரியா்களிடம் வழங்கிப் பாராட்டினாா்.

மேலும், சிறந்த பள்ளி நிா்வாகிக்கான விருது நியூ ஈடன் ஆங்கிலப் பள்ளியின் தலைவா் டாக்டா் சோனா சாந்தினிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைத் தனியாா் பள்ளிகள் இயக்குநா் சுகன்யா வழங்கிப் பாராட்டினாா்.

இந்நிகழ்ச்சியில் தொழிலாளா் நல ஆணையா் வள்ளலாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.