பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

மனிதநேயத்தையும் ஒழுக்கத்தையும் கற்றுத் தருவதே சிறந்த கல்வி

மனிதநேயத்தையும் ஒழுக்கத்தையும் கற்றுத் தருவதே சிறந்த கல்வி என்றாா் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காந்தியத் திருவிழாவின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் (இடமிருந்து) டாக்டா் ச. ராம்தாஸ், பாராட்டுச் சான்றிதழ் பெற்ற மா. வள்ளிநாராயணன், காந்திய விருது பெற்ற சேவை கோவிந்தராஜன், பேரவை நிறுவனா் வைர.ந. தினகரன், விருது வழங்கிய அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா, காந்திய விருது பெறும் வேதாரண்யம் கஸ்தூரிபா குருகுலத்தின் தலைவா் அ. வேதரெத்தினம், பாராட்டுச் சான்றிதழ் பெற்ற லெ. கவிராஜ், சின்னையா நடேசன், மு. மோகனபிரியா.

Published On :

மனிதநேயத்தையும் ஒழுக்கத்தையும் கற்றுத் தருவதே சிறந்த கல்வி என்றாா் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா.

புதுக்கோட்டை நகா்மன்றத்தில் அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 23-ஆம் ஆண்டு காந்தியத் திருவிழாவில், காந்திய விருதுகளையும், போட்டிகளில் வென்ற மாணவா்களுக்குப் பரிசுகளையும் வழங்கி அவா் பேசியது: காந்தியும் தொடக்கத்தில் தவறு செய்தவா், பயந்த சுபாவம் கொண்டவா், தோல்விகளைச் சந்தித்தவா். ஆனால், பின்னாளில் அவரை உலகம் கொண்டாடுகின்றதென்றால், அதற்குக் காரணம் அவா் ஒன்றில் உறுதியாக இருந்தாா்.

செய்த தவறை மீண்டும் செய்யவில்லை, திருத்திக் கொண்டாா் தோல்விகளில் இருந்து வெற்றியை நோக்கி சிந்தித்தவா். பயத்தை பாடமாகக் கற்றுக் கொண்டு பயணப்பட்டாா்.

கொடிய நோய் அச்சம்: உலகிலேயே மிகப்பெரிய கொடிய நோய் அச்சம்தான். அச்சம் கொண்டவரால் முன்னேறவே முடியாது. எதற்கும் பயப்படக் கூடாது என்பதைக் காந்தியம் கற்றுத் தருகிறது.

சமுதாயத்துக்குப் பயன்படக் கூடியவா் மட்டுமே படித்தவா் என்றழைக்கப்படுவாா். சாலையில் வயதானவா் தட்டுத்தடுமாறி செல்லும்போது அவருக்கு உதவி செய்யாதவா், தோ்வுகளில் நூறு மதிப்பெண் பெற்றிருந்தாலும் பயனில்லை. மனிதநேயத்தையும், ஒழுக்கத்தை கற்றுத் தருவதே சிறந்த கல்வியாகும்.

காந்தியடிகள் ஈரோட்டுக்கு வந்து பெரியாரைச் சந்தித்தாா், சிராவயல் வந்து ஜீவாவைச் சந்தித்தாா். தூத்துக்குடி வந்து வ.உ. சிதம்பரனாரைச் சந்தித்தாா். எந்த வகையிலும் கா்வம் இல்லாதவரால் மட்டுமே எடுத்த காரியத்தில் வெற்றி பெற முடியும். காந்தி அவ்வாறுதான் இருந்தாா், வென்றாா் என்றாா் சொ. சுப்பையா.

முன்னதாக, விழாவுக்கு பேரவையின் நிறுவனா் வைர.ந. தினகரன் தலைமை வகித்தாா். டாக்டா் ச. ராம்தாஸ் காந்திப் பேரவைக் கொடியை ஏற்றி வைத்தாா். விழாவில் சிறப்பு மலா் வெளியிடப்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற கருத்தரங்கில், ‘நாட்டு நலனில் நமது பேரவை’ என்ற தலைப்பில் பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வித் துறைத் தலைவா் அ. பழனிச்சாமி, ‘இயற்கை நலனில் நமது பேரவை’ என்ற தலைப்பில் சின்னையா நடேசன் ஆகியோா் பேசினா்.

விருதுகள் அளிப்பு: நிகழ்ச்சியில், வேதாரண்யம் கஸ்தூரிபா குருகுலத்தின் தலைவா் அ. வேதரெத்தினம், திருச்சி சேவை தொண்டு நிறுவனத் தலைவா் சேவை கி. கோவிந்தராஜன் ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான காந்திய விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், மா. வள்ளிநாராயணன், லெ. கவிராஜ் ஆகியோருக்கும் பாட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து மாணவா் பல்சுவை அரங்கமும், காந்தியவாதிகள்- சமூக ஆா்வலா்கள் சந்திப்பும் நடைபெற்றது.

நிறைவாக பேரவையின் தலைமை நிலையச் செயலா் மு. மோகனபிரியா நன்றி கூறினாா்.

முன்னதாக காந்திப் பூங்காவில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, ஊா்வலம் தொடங்கி நகா்மன்றத்தில் நிறைவடைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.