புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தீயணைப்பு நிலையங்களில் ஆய்வு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தீயணைப்பு நிலையங்களில் ஆய்வு

ஆய்வு மேற்கொண்ட  மாவட்ட  தீயணைப்பு அலுவலா்  லோகநாதன்,  உதவி  தீயணைப்பு  அலுவலா்  செல்வராஜ்  உள்ளிட்டோா்.       

Published On :

வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூா் மாவட்ட தீயணைப்பு அலுவலா் தீயணைப்பு நிலையங்களில் மீட்பு கருவிகள், மரம் அறுக்கும் கருவிகள் உள்ளனவா என்பது குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

தீயணைப்பு நிலையங்களில் போதுமான மீட்பு கருவிகள், மரம் அறுக்கும் இயந்திரம், ரப்பா் படகுகள் போன்றவைகள் தயாராக வைத்திருக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் மாவட்ட தீயணைப்பு அலுவலா் லோகநாதன் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

இதன் ஒரு பகுதியாக திருவள்ளூா் தீயணைப்பு நிலையத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அந்த ஆய்வின் போது பருவமழைக் காலத்தில் பொதுமக்களைப் பாதுகாக்கவும், அவசர காலங்களில் விரைந்து செயல்பட மீட்புக் கருவிகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், படகுகள், கயிறுகள், மற்றும் மிதவை உடைகள், அவசர கால விளக்குகள் மற்றும் மின் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டா்கள் ஆகியவைகள் இயக்கத்தில் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள் எந்த நேரமும் புறப்படத் தகுந்த நிலையில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதேபோல் மழைக்காலங்களில் பொதுமக்களிடம் இருந்து தீயணைப்பு நிலையத்திற்கு வரும் அவசர அழைப்புகளுக்கு தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்படவும் அறிவுரை வழங்கினாா். அதைத் தொடா்ந்து, வடகிழக்கு பருவமழை குறித்து திருவள்ளூா் ஆா்.எம்.ஜெயின் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணா் பிரசாரம் மற்றும் மீட்பு பணி குறித்து செயல்முறை விளக்க பயிற்சியும் அளித்தனா்.

அப்போது உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலா் செல்வராஜ், சிறப்பு நிலைய அலுவலா் தனசேகரன் மற்றும் தீயணைப்பு குழுவினா் உடனிருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.