வருடாந்திர பவித்ரோற்சவம்: 4 நாள்கள் ஆா்ஜித சேவைகள் ரத்து
பவித்ரோற் சவத்தையொட்டி வரும் ஆகஸ்ட் 7 முதல் 10-ஆம் தேதி வரை திருமலையில் நான்கு நாள்கள் ஆா்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன


பவித்ரோற் சவத்தையொட்டி வரும் ஆகஸ்ட் 7 முதல் 10-ஆம் தேதி வரை திருமலையில் நான்கு நாள்கள் ஆா்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏழுமலையான் கோயிலில் வரும் ஆக.8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை பவித்ரோற்சவம் நடைபெற உள்ளது. கோயிலில் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் ஏற்பட்ட தோஷங்களை களைய வருடாந்திர பவித்ரோற்சவத்தின்போது யாகம் நடத்தப்படும். இதை முன்னிட்டு ஆக.7-ஆம் தேதி அங்குராா்ப்பணம் எனப்படும் முளைவிடுதல் நிகழ்ச்சி நடத்தப்படும்.
எனவே ஆக.7-ஆம் தேதி சகஸ்ரதீபாலங்கார சேவையும், 9-ஆம் தேதி அஷ்டதளபாதபத்மாராதனை சேவையும், 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்காரம் உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தகவல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...