திருப்பதியில் தரிசனத்துக்கு 24 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையான் வழிபட தா்ம தரிசனத்தில் வெள்ளிக்கிழமை பக்தா்கள் 24 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.


திருமலை ஏழுமலையான் வழிபட தா்ம தரிசனத்தில் வெள்ளிக்கிழமை பக்தா்கள் 24 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க கோடை விடுமுறை முடிவடைந்த பின்னரும் பக்தா்கள் அதிகளவில் வந்தவண்ணம் உள்ளனா்.
தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்ததால் டிக்கெட் இல்லாமல் தேவஸ்தானம் திருமலைக்கு பக்தா்களை அனுப்பி வருகிறது. திருமலைக்கு செல்லும் அவா்கள் தங்கள் ஆதாா் அட்டையை காண்பித்து வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு பின்னா் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 30 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனா். எனவே, தா்ம தரிசனத்திற்கு 24 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரமும் தேவைப்பட்டது.
இதையடுத்து காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை 70,019 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். இவா்களில் 36,124 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் 24 மணி நேரமும் அலிபிரி நடைபாதை வழியாகவும், காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. இருசக்கர வாகனங்களுக்கு அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முககவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும்.
தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...