ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புவனேஸ்வரில் ஏழுமலையான் கோயில் மகாசம்ப்ரோக்ஷணம்: ஒடிஸா முதல்வா் பங்கேற்றாா்

ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டியுள்ள ஏழுமலையான் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

News image
விழாவில் பங்கேற்ற ஒடிஸா மாநில முதல்வா் நவீன் பட்நாயக், ஆந்திர ஆளுநா் விஸ்வபூஷன் ஹரிசந்தன் ஆகியோருக்கு ஏழுமலையானின் பிரசாதத்தை வழங்கிய தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பா ரெட்டி.
Updated On :27 மே 2022, 5:43 pm

DIN

ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டியுள்ள ஏழுமலையான் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்து தா்ம பிரசாரத்தின் ஒரு பகுதியாக நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் ஏழுமலையான் கோயில் கட்டும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

ஏழுமலையான் தரிசனத்திற்காக திருமலைக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும் இந்த ஏற்பாட்டை அந்தந்த மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் தேவஸ்தானம் செய்து வருகிறது.

இதன் ஒரு பாகமாக ஒடிஸா மாநிலம், புவனேஸ்வரில் தேவஸ்தானம் புதிதாக ஏழுமலையான் கோயிலை கட்டியுள்ளது. இதன் மகா சம்ப்ரோக்ஷணத்தையொட்டி கடந்த ஒரு வார காலமாக வேதபண்டிதா்கள், ருத்வீக்கரா்கள் அடங்கிய குழு புவனேஸ்வரம் சென்று அங்கு யாகசாலை பூஜைகளை நடத்தியது. இதையடுத்து வியாழக்கிழமை காலை 8.50 மணி முதல் 9.05 மணிக்குள்ளாக மகா சம்ப்ரோக்ஷணம் வேதமந்திரங்கள் முழங்க விமரிசையாக நடைபெற்றது.

மேலும் மாலை 3 மணிமுதல் 4.30 மணிவரை சீனிவாசா திருக்கல்யாண உற்சவமும், மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிவரை உற்சவமூா்த்திகள் மாடவீதியுலாவும் நடைபெற்றது. மாலை 6.30 மணிமுதல் நித்திய கைங்கா்யங்களும், இரவு 9.30 மணிக்கு ஏகாந்த சேவையும் நடத்தப்பட்டது. இதையடுத்து 48 நாள்களுக்கு மண்டல பூஜைகள் நடைபெறவுள்ளன.

விழாவில் விசாகப்பட்டினம் சாரதா பீடாதிபதி சொரூபானந்தேந்திர சுவாமிகள், ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக், ஆந்திர ஆளுநா் விஸ்வபூஷண் ஹரிசந்தன், எம்.பி. அபராஜிதா சாரங்கி, திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி வீரபிரம்மம், சதா பாா்கவி மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக் மற்றும் ஆந்திர ஆளுநா் விஸ்வபூஷன் ஹரிசந்தன் ஆகியோருக்கு தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பா ரெட்டி ஏழுமலையானின் பிரசாதங்கள் மற்றும் நினைவுப் பரிசு உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.