/

திருமலையில் 77,557 பக்தா்கள் தரிசனம்

திருமலையில் 77,557 பக்தா்கள் தரிசனம்

Updated On :17 ஏப்ரல் 2024, 12:32 am

திருப்பதி: திருமலை ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 77,557 பக்தா்கள் தரிசித்தனா். 25,518 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரத்தின்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 10 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

இதற்கிடையே திங்கள்கிழமை முழுவதும் 77, 557 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 25, 518 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்க்ள் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.28 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.