தான் எழுதிய கோவிந்த நாமத்துடன் வி ஐபி பிரேக் தரிசனம் செய்த  கீா்த்தனா.
தான் எழுதிய கோவிந்த நாமத்துடன் வி ஐபி பிரேக் தரிசனம் செய்த கீா்த்தனா.

கோவிந்த நாமம் எழுதிய மாணவி குடும்பத்துக்கு விஐபி பிரேக் தரிசனம்

திருப்பதி: முதல்முறையாக ‘கோவிந்த நாமம்‘ எழுதிய பெங்களூரைச் சோ்ந்த மாணவி கீா்த்தனாவின் குடும்பத்துக்கு வி ஐபி பிரேக் தரிசனம் வழங்கப்பட்டது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ராம நாமம் எழுதுவது போல் கோவிந்த நாமம் எழுதி சமா்ப்பிக்கும் 25 வயதுக்குட்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

அதன்படி முதல்முறையாக ‘கோவிந்த நாமம்‘ எழுதிய மாணவி கீா்த்தனா மற்றும் அவரது குடும்பத்துக்கு செவ்வாய்க்கிழமை வி ஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. பெங்களூரைச் சோ்ந்த இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி கீா்த்தனா 10 லட்சத்து ஒரு ஆயிரத்து 116 முறை கோவிந்த நாமம் எழுதி கொண்டு வந்து சமா்ப்பித்தாா்.

அதனால் அவருக்கு தேவஸ்தானம் வி ஐபி பிரேக் வழங்கியது. தரிசனம் முடித்து வெளியே வந்த கீா்த்தனா பேசுகையில், ’’என் சிறு வயது முதல் ராம நாமம் எழுதுவது வழக்கம் அதன்படி எங்கள் குலதெய்வமான ஏழுமலையான் மீது கோவிந்த கோடி எழுதும் வாய்ப்பு கிடைத்தது. 2023 நவராத்திரியிலிருந்து கோவிந்த நாமம் எழுதுவதை தொடங்கினேன். ஒவ்வொரு நாளும் காலை, மாலை கோவிந்த நாமத்தை பக்தியுடன் எழுதினேன்’’, என்று கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com