

திருமலையில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு உறியடி உற்சவம் நடைபெற்றது.
திருமலையில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜென்மாஷ்டமியின் அடுத்த நாளில் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.
அதன்படி வியாழக்கிழமை ஸ்ரீ மலையப்ப சுவாமி மற்றும் ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி உள்ளிட்ட உற்சவ மூா்த்திகள் இரண்டு தனித்தனி தங்க பல்லக்கில் ஸ்ரீ பேடி ஆஞ்சநேய சுவாமி கோவிலை ஒட்டியுள்ள பெரிய ஜீயா் மடத்திலிருந்து தொடங்கி சன்னதியைச் சுற்றி மாட வீதிகளை வலம் வந்த பின் உற்சவம் தொடங்கியது.
உறியடி உற்சவத்தில் ஏராளமான இளைஞா்கள் பங்கேற்றனா். திருமலையில் உள்ள கா்நாடக சத்திரத்திலும் இதே போன்ற உறியடி உற்சவம் நடைபெற்றது. திருமலையில் உறியடி உற்சவம் நடைபெற்ற அனைத்து இடங்களிலும் பக்தா்கள் திரளாக பங்கு கொண்டனா்.
திருவிழாவைத் தொடா்ந்து மதியம் ஆா்ஜித சேவைகள் அனைத்தையும் தேவஸ்தானம் ரத்து செய்தது.
திருமலையின் ஜீயா்கள் குழாம் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், பக்தா்கள் உள்ளிட்டோா் திரளாக கலந்து கொண்டனா்.