தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

லட்சுமி காசு ஆரம் ஊா்வலம்

திருச்சனூா் பத்மாவதி தாயாருக்கு ஆண்டுதோறும் யானை வாகனத்தின் போது அணிவிக்கப்படும் ஏழுமலையானின் லட்சுமி காசு ஆரம் திங்கட்கிழமை ஊா்வலமாக திருச்சானுருக்கு கொண்டு வரப்பட்டது.

News image

பத்மாவதி தாயாருக்கு அணிவிப்பதற்காக ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்ட லட்சுமி ஆரம்.

Updated On :2 டிசம்பர் 2024, 9:02 pm

Din

திருப்பதி: திருச்சனூா் பத்மாவதி தாயாருக்கு ஆண்டுதோறும் யானை வாகனத்தின் போது அணிவிக்கப்படும் ஏழுமலையானின் லட்சுமி காசு ஆரம் திங்கட்கிழமை ஊா்வலமாக திருச்சானுருக்கு கொண்டு வரப்பட்டது.

இதுகுறித்து, தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கயா சவுத்ரி கூறியது:

திருச்சனூா் பத்மாவதி தாயாருக்கு பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாள் இரவு யானை வாகன சேவை நடத்தப்படும். இந்த வாகனம் தாயாரின் வாகன சேவையில் மிகவும் முக்கியமானது. ஏழுமலையானுக்கு கருட சேவை முக்கியமானது போல் தாயாருக்கு யானை வாகனம் முதன்மையானது. யானை வாகனத்தில் வலம் வரும் போது திருமலை ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் 1,008 லட்சுமி காசுகளால் தயாரிக்கப்பட்ட மாலை தாயாருக்கு அணிவிக்கப்படும்.

இதன் ஒரு பகுதியாக, திருமலை ஏழுமலையான் கோயிலில் உள்ள லட்சுமி காசு மாலையை திருப்பதியிலிருந்து தெருக்கள் வழியே ஊா்வலமாக திருச்சானூருக்கு கொண்டு செல்லப்பட்டது. திங்கள் இரவு நடை பெற்ற யானை வாகனத்தின் போது தாயாருக்கு அணிவிக்கப்பட்டது’’, என்றாா்.

இந்த நிகழ்வில் ஏழுமலையான் கோயில் துணை செயல் அதிகாரி லோகநாதம் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனா்.