மே மாதத்துக்கான ஏழுமலையான் ஆா்ஜிதசேவை டிக்கெட்டுகள் வரும் 19-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையான் ஆா்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கான மே மாத ஒதுக்கீட்டை பிப்ரவரி 19 -ஆம் தேதி காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிட உள்ளது. இந்த சேவை டிக்கெட்டுகளை மின்னணு குலுக்கல் செய்வதற்காக ஆன்லைன் பதிவு பிப்ரவரி 21- ஆம் தேதி காலை 10 மணி வரை செய்து கொள்ளலாம். அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு லக்கிடிப்பில் விண்ணப்பித்தவா்களுக்கு டிக்கெட் ஒதுக்கப்படும். இந்த டிக்கெட்டுகளை பெற்றவா்கள் பணத்தை செலுத்தி டிக்கெட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதீபாலங்கார சேவா டிக்கெட்டுகள் 22 -ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். விா்ச்சுவல் சேவைகளுக்கான மே மாத ஒதுக்கீடு 22 அன்று மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். மே மாதத்துக்கான ஸ்ரீவாணி டிரஸ்ட் டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீட்டை 23 -ஆம் தேதி காலை 11 மணிக்கும் மே மாதத்துக்கான அங்கப்பிரதக்ஷிணம் டோக்கன்கள் ஒதுக்கீடு 23 -ஆம் தேதி காலை 10 மணிக்கும் வெளியிடப்பட உள்ளன. முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள் திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக, மே மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்களின் ஒதுக்கீடு 23-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. அதேபோல் மே மாதத்துக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு 24- ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. திருமலை மற்றும் திருப்பதியில் அறை ஒதுக்கீடு வெளியீடு திருமலை மற்றும் திருப்பதியில் மே மாதத்திற்கான அறை ஒதுக்கீடு 24 அன்று மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். வரும் 27-ஆம் தேதி காலை 11 மணிக்கு ஸ்ரீவாரி சேவை, மதியம் 12 மணிக்கு நவனித சேவை, 2 மணிக்கு பரகாமணி சேவை ஒதுக்கீடு ஆகியவை ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளன. பக்தா்கள் இந்த விஷயங்களைக் கவனத்தில் கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.










