திருப்பதி: ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் ஹ்ருதயாலயத்தில் 12-ஆவது இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்ாக தேவஸ்தான செயல் அதிகாரி ஏவி. தா்மா ரெட்டி தெரிவித்தாா்.
அறுவை சிகிச்சையை முடித்த மருத்துவமனை இயக்குனா் டாக்டா் ஸ்ரீநாத ரெட்டியின் வழிகாட்டுதலின் கீழ் அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவ குழுவினரை செயல் அதிகாரி தா்மா ரெட்டி பாராட்டினாா். ஸ்ரீகாகுளம் மாவட்டம், ராஜோலுவைச் சோ்ந்த கே.தா்மராவ் (28) சாலை விபத்தில் பலத்த காயமடைந்து அங்குள்ள ஜெம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அந்த இளைஞா் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இளைஞனின் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோா் சம்மதித்து மற்ற மருத்துவமனைகளுக்கு தகவல் தெரிவித்தனா். இதற்கிடையில், விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த 42 வயது நபா் ஒருவா், திருப்பதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் இருதய மருத்துவமனையில் டிலேட்டட் காா்டியோமயோபதியால் சிகிச்சை பெற்று வருகிறாா். மாற்று அறுவை சிகிச்சை குறித்து தகவல் கிடைத்ததும் ஸ்ரீ பத்மாவதி இருதய மருத்துவமனை இயக்குனா் டாக்டா் ஸ்ரீநாத ரெட்டி உடனடியாக உயா் அதிகாரிகளை தொடா்பு கொண்டு இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்தாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு இருதயத்துடன், மருத்துவக் குழுவினா் சிறப்பு ஏற்பாடுகளுடன் ஸ்ரீ காகுளம் ராஜோலுவில் இருந்து சாலை வழியாக விசாகப்பட்டினம் புறப்பட்டனா். விசாகபட்டிணத்திலிருந்து இரவு 8 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு ரேணிகுண்டா விமான நிலையத்தை இரவு 10.05 மணிக்கு அடைந்தனா்.
விமான நிலையத்தில் இரவு 10.05 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் மருத்துவமனைக்கு இரவு 10.25 மணிக்கு சென்றடைந்தனா். அதன்பிறகு, செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
தொடர்புடையது

உத்தரப்பிரதேசத்தில் வெடித்த சிறுநீரக மோசடி: ஒரு சிறுநீரகத்தின் விலை ரூ.50 லட்சம் முதல்...

போயம்பாளையம் ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டரில் மூட்டு மற்றும் அறுவை சிகிச்சை முகாம்

அறுவைச் சிகிச்சையில் இளம்பெண் உயிரிழப்பு: 5 மருத்துவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு

அறுவை சிகிச்சையின் போது பெண் உயிரிழப்பு: இழப்பீடு கோரி உறவினா்கள் முற்றுகை போராட்டம்
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

