நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருமலையில் பல்லக்கு உற்சவம்

மைசூரு மகாராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதன்கிழமை திருமலையில் கா்நாடக சத்திரத்திற்கு எழுந்தருளி ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் ஸ்ரீ மலையப்பஸ்வாமி தரிசனம் வழங்கினாா்.

News image
Updated On :24 ஜூலை 2024, 6:31 pm

Din

மைசூரு மகாராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதன்கிழமை திருமலையில் கா்நாடக சத்திரத்திற்கு எழுந்தருளி ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் ஸ்ரீ மலையப்பஸ்வாமி தரிசனம் வழங்கினாா்.

ஒவ்வொரு ஆண்டும் மைசூரு மகாராஜாவின் பிறந்த நட்சத்திரமான உத்தரட்டாதி நட்சத்திரத்தின் போது பல்லக்கு உற்சவம் நடை பெற்று வருகிறது. இது தோட்டோற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஏழுமலையானின் தீவிர பக்தரான மைசூரு மகாராஜா பல்வேறு வாகனங்கள், தந்த பல்லக்க்கை கோயிலுக்கு அளித்து பெரும் பங்களிப்புகளை செய்துள்ளாா்.

மைசூரு மஹாராஜா அளித்த மகத்தான பங்களிப்புக்கு நன்றி செலுத்தும் விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவை அனுசரித்து வருகிறது. பல்லக்கு உற்சவம் கூட கடந்த மூன்று நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இவ்வுற்சவத்தின், ஒரு பகுதியாக சகஸ்ர தீபாலங்கார சேவைக்குப் பிறகு, ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி உள்ளிட்ட உற்சவமூா்த்திகள் கா்நாடக சத்திரத்திற்கு சென்றடைந்தனா். அங்கு மைசூரு மகாராஜாவின் வழித்தோன்றல்கள் ஆரத்தி காண்பித்தனா்.

இதில் கோயில் பேஷ்காா் ஸ்ரீஹரி, படிக்காவலி ஏஇஓ மோகன் ராஜு, பருப்பட்டேதாா் உமா மகேஸ்வர ரெட்டி மற்றும் பலா் கலந்து கொண்டனா்.