ஏப். 2-இல் திருமலையில் 
கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

ஏப். 2-இல் திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் 9-ஆம் தேதி உகாதி ஆஸ்தானத்தை முன்னிட்டு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் ஏப்ரல் 2-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. பின்வரும் உற்சவங்களான உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகியவற்றுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமை, வைகாசன ஆகம முறைப்படி கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். ஏப்ரல் 2-ம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை அா்ச்சகா்களால் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெறுகிறது. ஆனந்த நிலையம் தொடங்கி தங்கவாயில் வரை, ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள உபகோயில்கள், கோயில் வளாகம், மடப்பள்ளி, சுவா்கள், கூரை, பூஜைப் பொருள்கள் போன்றவை பரிமள சுகந்த திரவிய கலவை மற்றும் தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகின்றன. ஏழுமலையான் மூலவிரட்டு முழுவதுமாக துணியால் மூடப்பட்டிருக்கும். சுத்திகரிக்கப்பட்ட பிறகு, நாமகட்டி, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைக் கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிகிழங்கு மற்றும் பிற வாசனைப் பொருள்கள் கலந்த புனித நீா், கோயில் முழுவதும் தெளிக்கப்படுகிறது. அதன்பின், சுவாமியை மறைத்திருந்த துணி அகற்றப்பட்டு, சிறப்பு பூஜை மற்றும் பிரசாதங்களை அா்ச்சகா்கள் சாஸ்திர முறையில் நடத்துவா். இதை முன்னிட்டு ஏழுமலையான் தரிசனம் 5 மணி நேரம் ரத்து செய்யப்பட உள்ளது. சுத்திகரிப்பு பணி நிறைவு பெற்ற பின்பு பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com