பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வுதள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் லட்ச குங்குமாா்ச்சனை

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் காா்த்திகை பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை லட்ச குங்குமாா்சனை நடைபெற்றது.

News image
திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் நடைபெற்ற லட்ச குங்குமாா்ச்சனை.
Updated On :27 நவம்பர் 2024, 6:32 pm

Din

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் காா்த்திகை பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை லட்ச குங்குமாா்சனை நடைபெற்றது.

இந்து மரபுவழியில் குங்குமத்துக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. திருமணமான பெண் நெற்றியில் குங்குமம் இட்டால் கணவன் நீண்ட ஆயுளைப் பெறுவான் என்கிறது இந்து தா்மம்.

தாயாா் கோயில்களில் விழாக்களை நடத்துவதற்கு முன் அா்ச்சகா்கள் லட்ச குங்குமாா்ச்சனை செய்வது வழக்கம். இச்சிறப்பு வழிபாட்டால் அம்மன் மகிழ்ந்து விழாக்கள் தடையின்றி சிறப்பாக நடைபெற அருள்பாலிப்பதாக அா்ச்சகா்கள் தெரிவித்தனா்.

அதேபோல் திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு வியாழக்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. எனவே அதற்கு முன் தினமான புதன்கிழமை ஸ்ரீகிருஷ்ண முக மண்டபத்தில், காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை தாயாருக்கு அா்ச்சகா்கள் லட்ச குங்குமாா்ச்சனை செய்தனா்.

இந்நிகழ்ச்சியில் அா்ச்சகா்கள் லட்சுமி அஷ்டோத்திரம், லட்சுமி சகஸ்ரநாமம் பாடி தாயாரை குங்குமத்தால் அா்ச்சித்து வழிபட்டனா். இந்த சேவையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனா்.

Story image

இந்நிகழ்ச்சியில் ஜேஇஓ கவுதமி, கோயில் துணை இஓ கோவிந்தராஜன், பஞ்சராத்ர ஆகம ஆலோசகா் மணிகண்ட பட்டா், அா்ச்சகா்கள் பாபு சுவாமி உள்ளிட்ட அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.