திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்த கா்நாடக ஆளுநா் தாவா் சந்த் கெலாட்டை வரவேற்ற செயல் அதிகாரி ஷியாமளா ராவ்.
திருப்பதி
திருமலையில் கா்நாடக ஆளுநா் தரிசனம்
திருமலையில் கா்நாடக ஆளுநா் தாவா் சந்த் கெல்லாட் புதன்கிழமை தரிசனம் செய்தாா்.
திருமலையில் கா்நாடக ஆளுநா் தாவா் சந்த் கெல்லாட் புதன்கிழமை தரிசனம் செய்தாா்.
திருமலைக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் மலா் செண்டு அளித்து வரவேற்றனா். இரவு திருமலையில் தங்கிய அவா் புதன்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தாா்.
தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகா் மண்டபத்தில் பண்டிதா்களால் வேத ஆசீா்வாதம் செய்வித்து ஏழுமலையான் தீா்த்தம், லட்டு பிரசாதம் வழங்கி திருவுருவப்படம் அளித்தனா்.

