திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

தா்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

News image

திருமலை ஏழுமலையான் - கோப்புப்படம்

Updated On :31 மே 2025, 2:46 am IST

தா்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

வியாழக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 69,019 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 37,774 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையைக் கணக்கிட்டதில், அதன்மூலம் ரூ.3.42 கோடி கிடைத்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார நாள்களிலும் தற்போது அதிகரித்துள்ளது. இதனால், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளைக் கடந்து வெளியே உள்ள தரிசன வரிசையில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு, அதாவது தரிசனத்துக்கு டோக்கன்கள் இல்லாத பக்தா்கள் 24 மணி நேரம் காத்திருந்தனா்.

வழக்கம்போல, ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது. இதேபோல், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் தேவைப்பட்டது.

அலிபிரி நடைபாதை வழியாக பிற்பகல் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா் அனுமதிக்கப்படுகின்றனா். இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.