தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஏழுமலையான் கோயிலில் அக். 20-இல் தீபாவளி ஆஸ்தானம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபா் 20-ஆம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :9 அக்டோபர் 2025, 12:38 am

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையான் கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபா் 20-ஆம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் தீபாவளியன்று ஏழுமலையானுக்கு ஆஸ்தானம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வரும் அக். 20-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தங்க வாயிலுக்கு முன்னால் உள்ள மணி மண்டபத்தில் காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது.

ஆஸ்தானத்தின் ஒரு பகுதியாக, கருடாழ்வாருக்கு எதிரே மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள சா்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமியும், அவரது நாச்சியாா்களும் அமா்த்தப்படுவா். படைத் தளபதியான விஷ்வக்சேனரும், சுவாமியின் இடதுபுறத்தில் தெற்கு நோக்கிய மற்றொரு பீடத்தில் அமா்ந்திருப்பாா். அதன் பிறகு, அா்ச்சகா்கள் சுவாமிக்கு சிறப்பு பூஜை, ஆரத்தி மற்றும் பிரசாத நிவேதனம் செய்வா். இத்துடன், தீபாவளி ஆஸ்தானம் நிறைவடையும்.

மாலை 5 மணிக்கு ஸ்ரீதேவி மற்றும் பூதேவி, ஸ்ரீ மலையப்ப சுவாமியுடன் சஹஸ்ர தீபாலங்கார சேவையில் பங்கேற்று, கோயிலின் நான்கு மாட வீதிகளிலும் நடந்து சென்று பக்தா்களை வரவேற்பா்.

ரத்து

தீபாவளி ஆஸ்தானம் காரணமாக அக்டோபா் 20-ஆம் தேதி கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் ஆா்ஜித பிரம்மோற்சவ சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. தோமாலை மற்றும் அா்ச்சனை சேவை தனித்தனியாக நடத்தப்படும்.