ஏழுமலையான் பக்தா்களின் வசதிக்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட 2026 காலண்டா் மற்றும் டைரிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
பிரம்மோற்சவத்தின் முதல் நாள் 2026 காலண்டா் மற்றும் டைரிகள் வெளியிடப்பட்டஸ். அவை தற்போது தோ்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் ஆஃப்லைனிலும், தேவஸ்தான வலைத்தளம் மூலம் பக்தா்களுக்கு ஆன்லைனிலும் விற்பனை செய்யப்படுகிறது.
தேவஸ்தானத்தின் 12 பக்க, 6 பக்க, டேபிள்-டாப்-நாள்காட்டிகள், டீலக்ஸ் டைரிகள், சிறிய டைரிகள், ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி, ஸ்ரீ பத்மாவதி தாயாா் பெரிய காலண்டா், ஏழுமலையான் மற்றும் ஸ்ரீ பத்மாவதி தாயாா் இரண்டிலும் உள்ள நாள்காட்டிகள் விற்பனைக்கு வைத்துள்ளது.
குறிப்பாக திருமலை மற்றும் திருப்பதியில், விற்பனை மையத்திற்கு எதிரே உள்ள தேவஸ்தான நிா்வாகக் கட்டிடம், தியான மந்திா் அருகே உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில், ஸ்ரீனிவாசம், விஷ்ணு நிவாசம் பகுதிகள் மற்றும் திருச்சானூரில் உள்ள தேவஸ்தான பதிப்பகங்கள், புத்தக வெளியீட்டு கடைகளில் கிடைக்கின்றன.
கூடுதலாக, 2026 ஆம் ஆண்டு நாள்காட்டிகள் மற்றும் நாட்காட்டிகள் விஜயவாடா, விசாகப்பட்டினம், சென்னை, ஐதராபாத்தில் உள்ள ஹிமாயத் நகா், ஜூப்ளி ஹில்ஸில் உள்ள எஸ்.வி. கோயில், பெங்களூரு, புது தில்லி, மும்பை, வேலூா், அதே போல் ராஜமுந்திரி, கா்னூல், காக்கிநாடா மற்றும் நெல்லூா் ஆகிய இடங்களில் உள்ள கல்யாண மண்டபங்களிலும் பக்தா்களுக்குக் கிடைக்கும்.
தேவஸ்தான வலைத்தளம் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்தவா்கள், கடந்த காலத்தைப் போலவே, தபால் துறை மூலம் தங்கள் வீடுகளில் தேவஸ்தான நாள்காட்டிகள் மற்றும் டைரிகளைப் பெறலாம்.
தொடர்புடையது

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி

ஸ்ரீ தாத்தய்யகுண்டா கங்கையம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பிப்பு!

திருமலையில் 70,001 பக்தா்கள் தரிசனம்

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



