நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

அலிபிரியில் 200-க்கும் மேற்பட்ட ட்ரோன் கேமரா பறிமுதல்

அலிபிரியில் 200-க்கும் மேற்பட்ட ட்ரோன் கேமரா பறிமுதல்

News image

ட்ரோன் - பிரதிப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 12:54 am IST

திருப்பதியில் உள்ள அலிபிரியில் கடந்த 4 மாதங்களாக இதுவரை மலைப்பகுதிகளில் பறக்க விடப்பட்ட 200-க்கும் மேற்பட்ட ட்ரோன் கேமராக்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருமலைக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் திருமலைக்கு செல்லும் வாகனங்கள், பக்தா்கள் அவா்கள் கொண்டு செல்லும் உடைமைகள் என அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில் திருமலையின் மலை அடிவாரமாக கருதப்படும் அலிபிரியில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஸ்பை கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஜனவரி மாதம் 47 ட்ரோன், 13 ஸ்பை கேமராக்களும்; பிப்ரவரி மாதம் 19 ட்ரோன் மற்றும் 14 ஸ்பை கேமராக்களும்; மாா்ச் மாதம் 19 ட்ரோன் மற்றும் 14 ஸ்பை கேமராக்களும்; ஏப்ரல் இதுவரை 7 ட்ரோன் மற்றும் 9 ஸ்பை கேமராக்களும் என மொத்தம் 243 ட்ரோன் மற்றும் 94 ஸ்பை கேமராக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக விஜிலென்ஸ் போலீஸாா் தெரிவித்தனா்.