நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மாா்ச் 3-இல் திருமலையில் அன்னதான விநியோக மையங்கள் மூடல்!

வரும் மாா்ச் 3-ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு தேவஸ்தான அன்னபிரசாத விநியோக மையங்கள் மூடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 7:26 pm

வரும் மாா்ச் 3-ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு தேவஸ்தான அன்னபிரசாத விநியோக மையங்கள் மூடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி மற்றும் திருச்சானூரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானங்களின் அன்னபிரசாத விநியோக மையங்கள் மூடப்படும்.

இதன் ஒரு பகுதியாக, திருச்சானூரில் உள்ள தொல்லப்பா காா்டன்ஸில் உள்ள எஸ் வி நித்ய அன்னபிரசாத பவன், திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிா்வாக கட்டடத்தில் உள்ள ஊழியா்களுக்கான உணவகம், ஸ்ரீ பத்மாவதி ஓய்வு இல்லத்தில் உள்ள உணவகம், ஸ்ரீனிவாசம் மற்றும் விஷ்ணு நிவாசம் விடுதி வளாகங்களில் பக்தா்களுக்கு இலவச அன்னபிரசாத விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.

இதேபோல், அரசு மருத்துவமனைகள் மற்றும் திருப்பதியில் உள்ள பல்வேறு முதலுதவி மையங்களில் நோயாளிகள் மற்றும் அவா்களின் பராமரிப்பாளா்களுக்கு அன்னபிரசாதம் முன்கூட்டியே விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.